பெண்களின் நிர்வாணப் படங்களை வைத்திருந்த காதலனை நண்பர்களுடன் சேர்ந்து அவரது காதலி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் வடக்கு டெல்லியில் பதிவாகியுள்ளது.
வடக்கு டெல்லி திமார்பூர் பகுதியை சேர்ந்தவர் ராம்கேஷ் மீனா (வயது32) என்பவர் அங்குள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
பொலிஸார் விசாரணை
கடந்த 6ஆம் திகதி அடுக்குமாடி குடியிருப்பில் தீயில் கருகிய நிலையில் ராம்கேஷ் மீனா உயிரிழந்தார். அதனையடுத்து சடலத்தை மீட்டு பொலிஸார் விசாரணை நடத்தினர். அங்குள்ள அறையில் சோதனை செய்த போது அவரது ஹார்ட்டிஸ்க்கில் 15 பெண்களின் நிர்வாண படங்கள் இருந்தன.
இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார் ராம்கேஷ் மீனா தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் ஒருவர் அங்கு வந்து சென்றதற்கான முக்கிய தடயம் ஒன்று பொலிஸாரிடம் சிக்கியது.
ராம்கேஷ் மீனாவுடன் அவரது காதலி அம்ரிதா சவுகான் லிவ்-இன் பார்ட்னராக வீட்டில் வசித்து வந்தது தெரிய வந்தது. இதனால் பொலிஸாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவரது முன்னாள் காதலன் சுமித் காஷ்யப் மற்றும் அவரது நண்பர் சந்தீப்குமார் ஆகியோருடன் சேர்ந்து ராம்கேஷ்மீனாவை கொன்று விபத்து போல் காட்ட தீவைத்ததாக கூறினார்.
மேலும் ராம்கேஷ்மீனா வைத்திருந்த ஹார்ட்டிஸ்க்கில் அம்ரிதா சவுகானின் நிர்வாண படங்களும் மேலும் சுமார் 15-க்கும் மேற்பட்ட பெண்களின் படங்களும் இருந்தது. அம்ரிதா சவுகான் அவளது படங்களை அழிக்க வற்புறுத்தியும் ராம்கேஷ் மீனா அழிக்காததால் அவனை கொன்றதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். ராம்கேஷ் மீனா பெண்களின் நிர்வாண படங்களை ஹார்ட்டிஸ்க்கில் சேமித்து வைத்து அடிக்கடி பார்த்து இரசித்து வந்துள்ளார். இதுவே கொலைக்கு காரணமாக இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.








































