Loading...
நுகேகொடை போராட்டத்திற்காக பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளன.
பேரணி ஆரம்பிக்க சில மணிநேரமே எஞ்சியுள்ள நிலையில், பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
உயர்தரப் பரீட்சை நடைபெறுவதால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
முக்கிய அரசியல்வாதிகள்
நுகேகொடை எலிமஹான் ரங்க பீடத்தில், இலங்கை பொதுஜன பெரமுன மற்றும் பிற எதிர்க்கட்சிகள் இணைந்து இன்று (21) பாரிய பேரணியொன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல முக்கிய அரசியல்வாதிகள் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...








































