Loading...
பேருந்துகளில் பயணிப்போருக்கு பயணச்சீட்டுக்களை விநியோகிக்காத நடத்துனர்களின் சேவை, 07 நாட்களுக்கு இடைநிறுத்தப்படும் என மேல் மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 01 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...
அத்துடன், சம்பந்தப்பட்ட பேருந்தின் பயணத்தை இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, செல்லுபடியாகும் பயணச்சீட்டுக்களை வைத்திருக்காத பயணிகளுக்கு விதிக்கப்படும் அபராதமுறை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
Loading...








































