பிரான்ஸில் ஒரு பெண்ணை தவறான முறைக்குட்படுத்தியதாகக் கூறப்படும் இலங்கை தமிழர் ஒருவர் இங்கிலாந்தின் லிவர்பூல் நகர மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர், தேசிய குற்றவியல் அமைப்பின் நாடுகடத்தல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
இங்கிலாந்தின் லிவர்பூல் நகர மையத்தில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கைது செய்யப்பட்ட நபர் 30 வயதான நபர் என தெரிவிக்கப்படுகின்றது. தேசிய குற்றவியல் அமைப்பின் நாடுகடத்தல் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இலங்கை நாட்டவர் பிரான்ஸ் அதிகாரிகளால் தேடப்பட்டு வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் முன்னிலை செய்யப்பட்ட அவரை நாடு கடத்தல் செயற்பாடுகள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்தோடு முழு நாடுகடத்தல் விசாரணை 2026 மார்ச் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








































