நாம் தினமும் சாப்பிடும் உணவில் பூண்டு சேர்த்து கொண்டால் அவ்வளவு உடலுக்கு நல்லது என்று பலருக்கும் தெரியும்.
ஆனால், அந்த பூண்டை உரித்து, அதன் பின் சிறிதாக வெட்டி போட வேண்டும் என்ற சோம்பேறி தனத்தின் காரணமாக பலர் அந்த பூண்டை பயன்படுத்துவதே இல்லை.
பார்ப்பதற்கு ஒரு பூண்டு தானே என்று நாம் சாதரணமாக நினைக்கலாம், ஆனால் அந்த ஒரு பூண்டில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது தெரியுமா?
அப்படிப்பட்ட இந்த பூண்டை பால் போன்று செய்து பருகினால், நமக்கு எவ்வளவு நன்மை என்பது குறித்து பார்ப்போம்.
பூண்டு பால் செய் முறை
முதலில் 4 முதல் 5 பூண்டு பற்களை எடுத்துக் கொண்டு, அதன் பின் ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் பால் ஊற்றி அதனுடன் பூண்டு சேர்த்து பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பால் பாதியாக சுண்டிய உடன் இறக்கி வைத்து பாலுடன் பூண்டையும் சாப்பிட வேண்டும்.
இப்படி தினமும் பூண்டு பாலை காய்ச்சி சாப்பிட்டுவர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடையும் குறையும்.
நன்மைகள்
பூண்டில் அல்லிசினில் முக்கிய மூலப் பொருளாக இருக்கிறது. இது பாக்டீரியா எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்களை வலிமையாகக் கொண்டுள்ளது.
பூண்டு காரத்தன்மை கொண்டது. பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனத்தில் இரத்தம் உறைதல் எதிர்ப்பு குணங்கள் இருப்பதால் உடலில் ரத்தக் கட்டிகள் உருவாகாமல் தடுக்கிறது.