கென்யா மற்றும் உகண்டாவில் இருந்து தனியார் ஜெட் விமானத்தின் மூலம் நான் இலங்கை வந்தது உண்மைதான் என்றும் தான் வருகை தந்த அதே ஜெட் விமானத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச திருப்பதிக்கு செல்ல ஏற்பாடு செய்தேன் என்றும் ஆபிரிக்காவிற்கான இலங்கை பிரதமரின் சிறப்பு தூதுவர் வேலுப்பிள்ளை கணநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும், எனது விருப்பத்திற்கு அமைய ஜெட்டில் நான் யாருடனும் பயணிக்க முடியும். ராஜபக்ச குடும்பத்துடன் நான் மிகவும் நெருக்கமான நட்புறவையும் சகோதரத்துவத்தையும் மேற்கொண்டு வருகின்றேன். எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களுடன் கைகோர்த்தே நின்றேன். இனியும் நிற்பேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.