களனிதிஸ்ஸையில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான சொஜிட்ஸ் களனிதிஸ்ஸ மின்சார நிலையம், பராமரிப்புக்காக தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.
டீசலில் இயங்கும் இந்த மின்சார நிலையத்தில் இருந்து தேசிய மின்சார உற்பத்திக்கு 160 மெகாவோட்ஸ் மின்சார அலகுகள் வழங்கப்படுகின்றன. 2003ஆம் ஆண்டு முதல் இந்த மின்சார நிலையம் இயங்கி வருகிறது,
நடப்பு மின்சார நெருக்கடிக்கு மத்தியில், குறித்த மின்சார நிலையத்தின் உற்பத்தி நிறுத்தப்படக்கூடாது என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ஏற்கனவே வலியுறுத்தியிருந்த நிலையிலேயே சொஜிட்ஸ் களனிதிஸ்ஸ மின்சார நிலையம் மூடப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை வரை, மின்சார தடங்கல்கள் ஏற்படாது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது .