கோயம்புத்தூர் சாய்பாபா காலனி அருகே உள்ள கே.கே.புதூர் பகுதியில் வசித்து வரும் 29 வயது இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரி அவர் தெரிவித்திருப்பதாவது,
சில வருடங்களுக்குன் முன் நண்பரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளகாதலாக மாறவே இது அவரது கணவருக்கு தெரிந்தது. அவர் கண்டித்தும் கேட்காமல் எங்கள் உல்லாசத்தை தொடர்ந்து வந்தோம்.
இதனால், ஆத்திரமடைந்த அவர் எனது வீட்டில் இருந்த போது என நண்பர் அவரது நண்பர்கள் 6 பேருடன் எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர் என்னை தாக்கி தகாத வார்த்தைகள் பேசி அவரது செல்போனில் என்னை ஆபாச வீடியோவும் எடுத்தார்.
பின்னர் இதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி வருவதாகவும் 2 லட்சம் ரூபாய் பணமும் கேட்டு மிரட்டி வருகிறார். இதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








































