நான்கு அண்ணன் தம்பிகள் கூட்டுக்குடும்பமாக வாழும் கதைதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். இதில் அதிக ரசிகர்களை கொண்ட கேரக்டராக முல்லை கேரக்டர் இருக்கிறது.
முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ராவின் துடிப்பான சுறுசுறுப்பான நடிப்பு அனைவரையும் ஆனால் எதிர்பாராதவிதமாக சித்ரா திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். இந்த கதாபாத்திரத்தை எப்படி ரிப்ளேஸ் செய்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவியா அறிவுமணி நடிக்க வந்தார்.
முதலில் ரசிகர்கள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஆனால் தனது திறமையான நடிப்பால் காவியா அறிவுமணி அனைவரையும் கவர்ந்தார். இந்த கதாபாத்திரத்தின் மூலம் காவியா நிறைய ரசிகர்களை பெற்றார்.
இந்த நிலையில், நடிகை காவியா பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்ட அழகான கலக்கலான வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)








































