கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் பகுதியில் 50 வயது பெண் ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் 17 வயது சிறுவன் ஒருவன் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அந்தப் பெண் சத்தம் போட்டு விடக்கூடாது என்பதற்காக பெண்ணின் தலையில் சுத்தியால் ஓங்கி அடித்துள்ளார். இதனால் அந்தப் பெண் மயக்கம் அடைந்துள்ளார்.
மேலும், அந்த சிறுவன் அந்த பெண்ணின் வீட்டில் இருந்த செல்போன்களை திருடிவிட்டு வேகமாக தப்பி ஓடியுள்ளார். சிறுவன் ஓடுவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சிகிச்சையின் போது அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள சிறுவர்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.








































