விருதுநகரில் அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்று விடவே சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். அப்போது அச்சப்பன் என்பவருடன் அந்த மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பழக்கம் நாளடைவில் காதலாக மாறிவே அந்தச் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த சிறுமியின் மாமா வந்து விட்டதால் பயந்துபோன அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து சிறுமியின் கேட்டபொழுது அவர் தன்னை மிரட்டி வீட்டில் இருக்க கூறியதாகவும் திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக தெரிவித்தார்.
உடனடியாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஆட்சேபனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








































