இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்றைய தினத்தில் 2-வது ஒரு நாள் போட்டியில் விளையாடியது. இதில், இந்திய அணி மீண்டும் ஒரு அபார வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஓப்பனிங் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு கொடுத்தது அதிர்ச்சியை கொடுத்தது.
குறிப்பாக ரோகித் சர்மா மேற்கொண்ட புதிய ஓப்பனிங் முயற்சி பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது. அதிலும், ராகுல் போட்டிக்கு திரும்பிய நிலையில், அவருக்கு பதிலாக ரிஷப் இறக்கியது தான் பெரிய விவாதமாகவே மாறியிருக்கிறது.
பண்ட் தொடர்ந்து சொதப்புவதால், அவரின் பேட்டிங் திறன் மேம்பட கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதை பண்ட் சரியாக பயன்படுத்தாமல் போனது தான் ரசிகர்களிடையே எரிச்சலை கிளப்பி இருக்கிறது.
34 பந்துகளை சந்தித்து 18 ரன்களுடன் நிதானமாக விளையாடி வந்தார். ஆனால் அவரின் நிதானத்தை தூண்டும் வகையில் ஒடியன் ஸ்மித் போட்ட பவுன்சர் பந்தில் பண்ட் சிக்கினார்.
ஏற்கனவே இந்திய அணியில் இடம்பிடிக்க வெளியே, ருதுராஜ், இஷான் கிஷான், ஸ்ரேயஸ் ஐயர் என பல வீரர்கள் போட்டி போடும் நிலையில், இவருக்கு வாய்ப்புகள் அதிகமாக கொடுக்கப்பட்டு வருகிறது.
இதைப்பற்றி விமர்சனங்கள் எழும்போது எல்லாம் ராகுல் டிராவிட் ஏதேனும் ஒரு காரணத்தை கூறி பண்ட்-ஐ மீண்டும் மீண்டும் அணிக்குள் சேர்த்து சொதப்பலை எதிர்கொண்டு வருகிறார்.
இதில் ரோகித் சர்மாவுக்கும் முக்கிய பங்குண்டு எனக் கூறப்படுகிறது. இதேபோல், தான் புஜாரா – ரகானேவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தார். ஆனால் அவர்கள் கடைசி வரை ஃபார்முக்கு வந்த பாடு இல்லை.
இந்திய அணியை பொறுத்தவரை நல்ல நல்ல பேட்ஸ்மேன்களை தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதும், சொதப்பிய வீரர்களுக்கே வாய்ப்பு கொடுப்பதும் பல விமர்சனங்கள் ரசிகர்களிடையே எழுந்து வருகிறது.
மேலும், அணியில் விளையாட துடிக்கும், ஷிகர் தவான், ருதுராஜ், நடராஜன், மணிஷ் பாண்டே போன்ற திறமையான வீரர்களையும் புறக்கணித்து வருகின்றனர்.








































