Loading...
விவசாயிகளிடமிருந்து மஞ்சளை உத்தரவாத விலையில் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறு தோட்ட பயிர்ச் செய்கை அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி விவசாய திணைக்களம் மற்றும் இலங்கை பலசரக்கு சந்தைப்படுத்தல் சபை என்பன இணைந்து கம்பஹா, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்ட விவசாயிகளிடமிருந்து 100,000 கிலோகிராம் மஞ்சளை கொள்வனவு செய்துள்ளது.
Loading...
ஒரு கிலோகிராம் தலா 165 ரூபா என்ற விலையில் கொள்வனவு செய்யப்படும் மஞ்சள் தூள் பதப்படுத்தப்பட்டு பலசரக்கு சந்தைப்படுத்தல் சபையின் விற்பனை நிலையங்கள் மூலம் நியாயமான விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் என அவ்வமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
Loading...








































