Loading...
கொலம்பியாவின் பெரையிரா அருகே காபி தோட்டத்திற்கு புகழ்பெற்ற லா எஸ்நெடா மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
Loading...
இந்த நிலச்சரிவில் அங்கிருந்த ஏழு வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. இதில், 16 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். மேலும், மாயமான மூவரை தேடி வருகின்றனர். விரைந்து வந்த மீட்புபடையினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். அப்போது மண்ணில் புதைந்திருந்த 62 வயது மூதாட்டியை மீட்டனர். தொடர்ந்து மீட்பு நடந்து வருகிறது.
Loading...








































