தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த, ஒரு கோடி இந்திய ரூபா மதிப்பிலான கொக்கேய்ன் போதைப்பொருளை, இராமநாதபுரம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு, பறிமுதல் செய்துள்ளது.
சம்பவம் தொடர்பில், காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இராமேஸ்வரம் பேருந்து நிலையத்திற்கு அருகில், கடந்த தினம் கைதுசெய்யப்பட்ட 5 பேரிடமிருந்து, ஒரு கிலோ 500 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கொக்கேய்ன் போதைப்பொருளை, மதுரையில் இருந்து பேருந்து மூலம் இராமேஸ்வரத்திற்கு கொண்டுசென்று, அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.








































