Loading...
வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக உழுந்து செய்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இலங்கையில் அதிக உழுந்து உற்பத்தி மாவட்டங்களில் ஒன்றாகிய வவுனியா மாவட்டத்தில் உழுந்து அறுவடை தற்போது இடம்பெற்று வருகின்றது.
Loading...
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் பலர் உழுந்து அறுவடையை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் விதைத்து 3 மாதமாக காத்திருந்து, அறுவடைக்கு தயாரான உழுந்து பயிர்கள் மழை காரணமாக பாதிப்படைந்து வருகின்றது. இதனால் பலரும் அறுவடையை மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Loading...








































