U19 உலக கோப்பை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ராஜேவர்தன் ஹங்காரகேகரை சென்னை அணி வாங்கி இருப்பது ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
IPL மெகா ஏலம் பெங்களூருவில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் U 19 உலகக்கோப்பை அணியில் சிறப்பாக விளையாடிய யாஷ், ராஜ் பாவா, ராஜேவர்தன் ஆகிய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், U19 உலக கோப்பை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ராஜேவர்தனை 1.5 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.
வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் உலக கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தி இருந்த நிலையிலும் அவரது பந்து வீசும் செய்கை அனைவராலும் கவனிக்கபட்டது. இந்த நிலையில் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் U19 உலக கோப்பையில் விளையாடிய ராஜ் பாவாவை பஞ்சாப் அணி 2 கோடிக்கும், U19 உலக கோப்பை அணியின் கேப்டன் யாஷ் துள்ளை டெல்லி அணி 50 லட்சத்திற்கும் வாங்கியுள்ளது.








































