உடல் கொழுப்பை குறைக்க நினைத்தால் தினமும் இந்த விதைகளை மாற்றி மாற்றி எடுத்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு பசியை ஏற்படுத்தும் ஆனால் விரைவில் உடல் எடையை குறைக்க முடியும். இந்த விதைகளை தினமும் எடுத்து கொண்டால் ஒரே வாரத்தில் 3 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம்..
சமையலறையில் உள்ள விதைகள் கூட எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் சியா விதைகளில் ஏராளமான நன்மைகள் குவிந்துள்ளது. இதில் பாஸ்பரஸ், மாங்கனீசு, கால்சியம், மெக்னீசியம், புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. அதுபோல இந்த விதைகளில் ஷேக், ஸ்மூத்தி செய்து சாப்பிட்டு வந்தால் விரைவில் எடையை குறைக்கலாம்.
ஆளி விதைகளில் புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு, கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்குகிறது. அதே நேரத்தில் அதில் காணப்படும் நார் சத்து செரிமானத்தையும் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. இந்த விதையை சட்னி, நெய் காய்கறி, ஓட் மீல் ஆகியவற்றில் பயன்படுத்தலாம்.
உடல் எடை குறைக்க சப்ஸா விதைகள் நன்மை பயக்கும். இதில் அமிலம் உள்ளதால் பசியை குறைத்து கொழுப்பை எரிக்க உதவுகிறது. உடல் பருமனைக் குறைக்க சப்ஸா விதைகளை சாலட், ஷேக் மற்றும் லஸ்ஸி வடிவில் உட்கொள்ளலாம்.








































