குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் தான் புகழ். இந்த நிகழ்ச்சிக்கு பின் பெரிய அளவில் பிரபலமாகிவிட்டர். பட வாய்ப்புகளால் பிஸியாக இருக்கும், இவர், பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த புகழ் அவருடைய காதலி என அனைவரும் கூறிவந்தனர்.
இதனிடையே தற்போது குக்வித் கோமாளி எபிசோட்டில் காதலியை பற்றி விரிவாக பேசியுள்ளார். அதில், “ நாங்கள் 5 வருடமாக காதலித்து வருகிறோம். அவரை எனக்கு கலக்கபோவது யாரு ஆடிஷன் போகும்போதே தெரியும்,.
அவர் பெயன் என்சி, நான் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பவித்ரா, தர்ஷாவுடன் செய்த அட்டகாசங்களை பற்றி இப்படி செய் அப்படி செய் என அதான் ரசிகர்கள் விரும்புவார்கள் என கூறுவார்.
மேலும், இந்த வருடத்தில் நாங்கள் திருமணம் செய்துகொள்வோம் என தெரிவித்து இருக்கிறார்.








































