Loading...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், மாணவியை கடந்த 10ம் தேதி முதல் காணவில்லை. இதனால், அதிர்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அலிக்க சென்ற போது அந்த சிறுவனின் பெற்றோர் அந்த மாணவியை அழைத்து வந்துள்ளனர்.
Loading...
மாணவியிடம் நடத்திய விசாரணையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இதனை தொடர்ந்து சிறுவனை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...








































