Loading...
வென்னப்புவவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் போதைப்பொருள் விருந்தொன்றை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் கைதான 39 பேரும் மார்ச் 16ஆம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஃபேஸ்புக் ஊடாக இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
சந்தேகநபர்கள் 20-30 வயதுடையவர்கள். அவர்கள் நாடு முழுவதும் பல பகுதிகளில் வசிப்பவர்கள்.
அவர்களிடம் இருந்து ஐஸ், ஹாஷிஸ், கஞ்சா மற்றும் 15 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Loading...








































