தேன் ஆரோக்கியமானது தான். ஆனால் அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது ஆபத்தை ஏற்படுத்தும்.
அதனால் தினசரி உணவில் தேன் மட்டுமே 60 கலோரிக்கும் மேல் இருந்தால் மற்ற உணவுகளின் கலோரிகளும் சேர்ந்து அதிகப்படியான கொழுப்பை ஏற்படுத்தும். இது நாளடைவில் உடல் பருமனை உண்டாக்கும்.
பொதுவாக எடையை குறைக்க நினைப்பவர்கள் வெதுவெதுப்பான நீரில் தேன் சேர்த்து குடிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள்.
ஆனால் காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறுடன் ஒரு சிட்டிகை உப்பு மட்டும் சேர்த்துக் குடித்தாலே நல்ல பலன் கிடைக்கும். தேனை தவிர்ப்பது நல்லது.
நீரிழிவு நோயாளிகள் தேன் சேர்ப்பது ஆபத்தா?
வெள்ளை சர்க்கரையை விட தேன் ஒருவகையில் சிறந்த மாற்றாக இருந்தாலும், அதிலும் சர்க்கரை (ஃப்ரக்டோஸ்) இருக்கத்தான் செய்கிறது.
அதனால் மிக்க குறைவான அளவிலேயே தேனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் தொடர்ந்து தேனை எடுத்துக் கொண்டால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் A1C அளவு அதிகரிக்கும்.
அது நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்த கூடும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாக்கி விடும்.
அதனால் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் முடிந்தவரை தேனையம் தவிர்த்துவிடுவது தான் நல்லது.








































