நடிகர் அர்ஜுனின் தாயார் லக்ஷ்மி தேவம்மா இன்று உயிரிழந்துள்ளார்.
அவருக்கு வயது 85.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் தமிழ் திரையுலகில் படங்களில் நடித்தது மட்டுமின்றி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.
சமீபத்தில் கூட இவர் சர்வைவர் என்கிற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கியதன் மூலம் தொகுப்பாளராகவும் அசத்தினார்.
தற்போது சில படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
அர்ஜுன் வீட்டில் நிகழ்ந்த எதிர்பாரா மரணம்
இந்நிலையில், நடிகர் அர்ஜுனின் தாயார் லக்ஷ்மி தேவம்மா இன்று உயிரிழந்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவருக்கு பெங்களூருவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தாயாரை இழந்து வாடும் நடிகர் அர்ஜுனுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.








































