ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிராட்பேண்ட் சேவையை வழங்க ஜியோபைபர் பெயரில் தனி பிரிவை இயக்கி வருகிறது.
நாட்டின் முன்னணி பிராட்பேண்ட் சேவை நிறுவனமாகவும் ஜியோபைபர் விளங்குகிறது.
இந்திய சந்தையில் முன்னணி டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருக்கிறது. இந்த நிறுவனம் பைபர் பிராட்பேண்ட் சேவைகளை வழங்க ஜியோபைபர் பெயரில் தனி பிராண்டை உருவாக்கி இருக்கிறது. நாடு முழுக்க பைபர் பிராட்பேண்ட் வழங்குவதில் ஜியோபைபர் அதிவேகமாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஜியோபைபர் நாட்டின் முன்னணி பைபர் பிராட்பேண்ட் நிறுவனமாக விளங்குகிறது.
ஜியோபைபர் அதிவேக பிராட்பேண்ட் வழங்குவதோடு ஒடிடி பலன்கள் அடங்கிய சலுகைகள், இலவச ஜியோ செட் டாப் பாக்ஸ் என ஏராளமான சேவைகளையும் கூடுதலாக வழங்கி வருகிறது. எனினும், இவை அனைத்திற்கும் அதிவேக இணைய வசதி அவசியம் ஆகும். சிலருக்கு தங்களின் வீட்டில் அனைத்து இடங்களிலும் வைபை கவரேஜ் சிறப்பாக இருக்காது. இது போன்ற சமயத்தில் நெட்வொர்க் கனெக்டிவிட்டி மோசமாகவே இருக்கும்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஜியோபைபர் புது சாதனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஒரு வைபை மெஷ் எக்ஸ்டெண்டர் ஆகும். இந்த எக்ஸ்டெண்டர் JCM0112 என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 499 மட்டுமே. இதனை மிக எளிய மாத தவணை முறை வசதியிலும் வாங்க முடியும். மாத தவணை மாதம் ரூ. 86.62 முதல் துவங்குகிறது.
புதிய மெஷ் எக்ஸ்டெண்டரை ரிலையன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது சில்லறை விற்பனை மையத்திற்கு சென்று இது பற்றிய விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த எக்ஸ்டெண்டர் அனைத்து விதமான கனெக்டிவிட்டி பிரச்சினைகளை சரி செய்து விடும். இத்துடன் இதனை இன்ஸ்டால் செய்யும் நடைமுறை மிகவும் எளிமையாக்கப்பட்டு இருக்கிறது.








































