Loading...
பஞ்ச பூதங்களை நம் நல் வாழ்விற்கு பயன்படுத்த வாஸ்து உதவுகிறது.
குழந்தைகள் கல்வி கற்பதற்கு வாஸ்துவை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
எண்ணங்களே நம் உடல் நலம், செல்வ வளம், உறவுகள் மற்றும் மன மகிழ்ச்சி உண்டாவதற்கு காரணம். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் கதிர் வீச்சுகள் நம் எண்ணங்களை மாற்றி அமைக்க வல்லவை. இந்த பஞ்ச பூதங்களை நம் நல் வாழ்விற்கு பயன்படுத்த வாஸ்து உதவுகிறது. குழந்தைகள் கல்வி கற்பதற்கு இந்த வாஸ்துவை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
Loading...
- குழந்தைகள் படிக்கும் அறை அமைக்க உகந்த திசைகள் வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு. குழந்தைகள் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து படிக்க வேண்டும். வடகிழக்கில் இருந்து வரும் கதிர்வீச்சு ஆற்றல் மூளையின் நினைவாற்றலை அதிகப்படுத்தும். எண்ணங்களை ஒருமகப் படுத்தும். படித்தது நன்றாக நினைவில் நிற்க உதவும். புரிந்து கொள்ளும் திறன் வளரும். படித்தது நன்றாக விளங்கும்.
- படிக்கும் அறை காற்றோட்டமாகவும் சூரிய வெளிச்சத்தோடு மற்றும் தூய்மையாக இருப்பது அவசியம். இது குழந்தைகளுக்கு புத்துணர்வை உண்டாக்கும். தூய காற்றை சுவாசிக்கும் போது மனம் புத்துண்ர்வு பெருகிறது. மனச்சோர்வு ஏற்படாமல் காக்கிறது. நீண்ட நேரம் களைப்பு இன்றி தொடர்ந்து படிக்க பெரிதும் துணை புரிகிறது.
- குழந்தைகள் அமரும் நாற்காலிக்கு முன்பு சுவர் இருப்பதும் அதில் கல்வி தொடர்பான புகைப்படங்கள் இருப்பதும் நலம். ஜன்னல்கள் இல்லாமல் இருப்பது நனமை. காரணம் கவனம் சிதறாமல் படிப்பதற்கு இது உதவுகிறது. பெரும்பாலான குழந்தைகளுக்கு மதிப்பெண் குறைவதற்கு முக்கிய காரணம் கவனச் சிதறல் தான்.
Loading...








































