Loading...
பல கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண்ணொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
34 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபரான பெண் எல்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த பெண் கடவட பிரதேசத்தில் 05 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Loading...
இந்த பெண் கோடீஸ்வரனாக நடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஹர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சந்தேக நபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Loading...








































