Loading...
- கலை இயக்குனர் சுனில் பாபு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
- இவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.
கேரளாவைச் சேர்ந்த சுனில் பாபு தமிழ், மலையாளம், தெலுங்கு என பல படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். ‘துப்பாக்கி’, ‘எம்.எஸ்.தோனி’, ‘சீதா ராமம்’, ‘பெங்களூர் டேஸ்’ என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய இவர் கடைசியாக வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்தார்.
Loading...
இந்நிலையில், சுனில் பாபு மாரடைப்பு காரணமாக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Loading...








































