டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்ததை தொடர்ந்து ஓஷன் கேட் தமது அனைத்து ஆய்வு மற்றும் வணிக நடவடிக்கைகளையும் இடைநிறுத்தியுள்ளது என்று அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் வெடித்த சம்பவம் குறித்து இன்னும் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க கடலோர காவல்படை தலைமையிலான அதிகாரிகள், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்களை தடுக்கும் நோக்கில் இந்த விசாரணை நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
ஆழ்கடலில் வெடித்த நீர்மூழ்கி கப்பல்
111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானி கப்பலை காண்பதற்காக புறப்பட்டு சென்ற டைட்டன் நீர்மூழ்கி உள்ளுக்குள்ளேயே வெடித்து சிதறியதில் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்தனர்.
இதன்பின்னர் ஆழ்கடலில் டைட்டன் நீர்மூழ்கியின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இருப்பினும் குறித்த இடத்தில் அழுத்தம் மிக அதிகமாக இருப்பதால் 5 பேரின் உடல்களை மீட்பது சாத்தியமில்லை என்றே நிபுணர்கள் கூறியிருந்தனர்.








































