இலங்கையில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை சுற்றுலாதாரிகளின் வருகையுடன் நிமிர்த்துவதே அரசின் முக்கிய எதிர்பார்ப்பு.
அந்த வகையில் இந்த மாதம் 23 ஆம் திகதியுடன் இலங்கைக்கு ஒரு இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். அவ்வாறு வருகை தந்தவர்களில் 100 ஆவது தடவையாக இலங்கைக்கு சுற்றுலா வந்தவரும் உள்ளடங்குகின்றார்.
100 ஆவது தடவையாகவும் இலங்கைக்கு
ஜேர்மனியை சேர்ந்த ஜோர்ஜ் சீலன் என்ற 72 வயதுடையவரே இவ்வாறு 100 ஆவது தடவையாகவும் இலங்கைக்கு வந்தவராவார்.
1971 ஆம் ஆண்டு தனது 19 ஆவது வயதில் இலங்கைக்கு வந்த அவர் தறபோது 2023 ஆம் ஆண்டு தனது 72 ஆவது வயதில் 100 ஆவது தடவையாக இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.
வரவேற்கும் நிகழ்வு
இவரை வரவேற்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் ருஹுனு சுற்றுலா பணியகத்தில் இடம்பெற்றது.இவர் சரளமாக சிங்களம் பேசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.








































