Loading...
ஜி 20 உச்சி மாநாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற வகையில் சமூக ஊடகங்களில் பொய்யான தகவலை பரப்பிய 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் நேற்றையதினம் (08.09.2023) வடக்கு டெல்லியில் இடம்பெற்றுள்ளது.
ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் பிரகதி மைதானம் பகுதியை நோக்கி துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு முச்சக்கர வண்டி ஒன்று சென்று கொண்டிருந்ததாக அவர் சமூக ஊடகம் ஒன்றில் பதிவிட்டிருந்தார்.
Loading...
இதனையடுத்து துரித நடவடிக்கை எடுத்த பொலிஸார் அவரை கைது செய்தனர்.
அத்துடன் அவர் குறிப்பிட்டிருந்த முச்சக்கர வண்டியையும் கண்டுபிடித்து சோதனையிட்டபோது எனினும் அதிலிருந்து எவ்வித சந்தேகப்பொருட்களும் மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...








































