Loading...
மனிதனுக்கு உள்ள பற்களை போன்று பல்வரிசை கொண்ட அபூர்வ வகை மீன் ஒன்று பிடிபட்டுள்ளதுடன் அதன் புகைப்படம் சமூக வலைதளங்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் மேரிலாந்தில் கடற்றொழிலுக்கு சென்ற 38 வயதான பிரையன் சுமர்லின் என்பவரிடமே இந்த விசித்திரமான மீன் சிக்கியுள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.
Loading...
அபூர்வ மீன்
அத்துடன் அந்த அபூர்வ மீனானது செம்மறியாட்டு மீன் என அழைக்கப்படுவதாக குறித்த கடற்றொழிலாளர் கூறியுள்ளார்.
மேலும் சமூக ஊடகங்களில் இந்த மீனின் படத்தைப் கடற்றொழிலாளர் பகிர்ந்துள்ளதுடன் அந்த மீனின் பற்கள் மனிதனின் பற்களைப் போல் காட்சியளித்தமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Loading...








































