Loading...
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் 03 வாரங்கள் சேவை நீடிப்பு வழங்குவதற்கான தீர்மானத்தை அங்கீகரிப்பதில்லை என நேற்று கூடிய அரசியலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், அரசியலமைப்பு சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மாற்றி பொலிஸ்மா அதிபரை மீண்டும் பணியில் அமர்த்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
Loading...
பொலிஸ்மா அதிபரை மீண்டும் நியமிப்பது தொடர்பான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து உத்தரவுகளை சீனாவில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதவிக்காலம் முடிவடைந்த பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவையை மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
Loading...








































