ஆரோக்கியமான உணவுகளில் முதலிடத்தில் இருப்பது காய்கறிகள் மற்றும் பழங்கள் தான்.
குறிப்பாக பச்சை காய்கறிகளில் அனைத்து வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டிஆக்சிடண்ட்கள் உள்ளன.
ஆனால் ஒருசில காய்கறிகளில் இயற்கையாகவே இருக்கும் புழுக்களால் நமக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும்.
காய்கறிகளில் இருக்கக்கூடிய ஒரு சில புழுக்கள் இரத்த ஓட்டத்தின் வழியே மூளைக்கு சென்று மிகவும் தீவிரமான நோய்களை ஏற்படுத்தக் கூடிய தன்மை கொண்டது.
காலிஃபிளவர்
காலிஃபிளவரில் நீல நிறத்தில், பச்சை நிறத்தில், வெள்ளை நிறத்தில் என்று பல நிறங்களில் புழுக்கள் வளர்வதைக் கண்டிருப்பீர்கள்.
ஒரு சில புழுக்கள் மிக மிக சிறிய அளவில் இருக்கும். இது போன்ற கண்ணுக்குத் தெரியாத அளவில் இருக்கும் லார்வா, சமைத்த பிறகும் உயிருடன் இருக்கும்.
எனவே இதை சாப்பிடும் பொழுது அவை மூளையில் வளரத் துவங்கும். தசைகள், கல்லீரல் மற்றும் மூளையை பாதித்து உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். முட்டைக்கோஸிலும் இதே போன்ற ஆபத்து இருக்கிறது.
கத்திரிக்காய்
கத்தரிக்காய் சாப்பிட அருமையாக இருந்தாலும் சில நேரங்களில் வெட்டும் பொழுது புழு இருக்கும். அப்படி புழு இருக்கும் கத்தரிக்காயை அப்படியே தூக்கி போட்டு விடுங்கள்.
கத்திரியில் இருக்கும் புழு நேரடியாக மூளைக்கு செல்லும். புழு இருக்கும் பகுதியை மட்டும் வெட்டிவிட்டு மீதமுள்ள பகுதியை சமைக்கிறேன் என்பதை தவிர்க்க வேண்டும்.
குடை மிளகாய்
குடைமிளகாய்க்கு உணவின் சுவையை முழுவதுமாக மாற்றி அமைத்து, மேம்படுத்தக்கூடிய தன்மை உள்ளது.
குடைமிளகாயில் இருக்கும் ஆபத்து புழுக்கள் இருப்பது மட்டுமல்ல. சரியாக சமைக்காமல் அல்லது பச்சையாக சாப்பிட்டால், புழுக்கள் இருந்தால் இரத்தத்தில் கலந்து, உடலிலேயே வளரத் தொடங்கும்.
சேப்பங்கிழங்கு இலை
சேப்பங்கிழங்கு வாங்கும் அளவுக்கு சேப்பங்கிழங்கு இலைகளையும் வாங்கி சாப்பிடுவார்கள்.
சேப்பங்கிழங்கு இலைகளை பாலக் கீரை போல சமைக்கலாம், பக்கோடா செய்யலாம்.மிகவும் சுவையாக இருக்கும்.
ஆனால் மேற்கூறிய காய்களில் இருப்பது போல இதிலும் புழுக்கள் இருக்கும் ஆபத்து இருக்கிறது எனவே கவனமாக சமைக்க வேண்டும்.
கோவைக்காய்
பொதுவாக கோவைக்காயில் புழுக்கள் வராது. அரிதாகவே, புழு இருக்கும் போது அது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.