தமிழக சட்டமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் டுவிட்டரில் தங்கள் கட்சி சின்னம் தொடர்பில் செய்த டிரண்ட் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் திகதி நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்கும் பணியில் முழு மூச்சாக இறங்கியுள்ளனர்.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியினரும் தேர்தலை எதிர்நோக்கியுள்ளனர்.
சீமான் சமீபத்தில் சசிகலாவை சந்தித்து பேசினார், இதையடுத்து அவரின் நாம் தமிழர் கட்சி, கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்குமா அல்லது தனித்து களம் காணுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீமான் தம்பிகளான நாம் தமிழர் கட்சியினர், கட்சியின் சின்னமான விவசாயி, கரும்பு ஆகியவற்றை பிரபலப்படுத்தும் முயற்சியாக டுவிட்டரில் ஒரு விடயத்தை மேற்கொண்டனர்.
அதன்படி #வெல்லபோறான்விவசாயி என்ற டேக்கை இந்திய அளவில் டிரண்ட் செய்து அசத்தினார்கள்.