சீனாவில் சந்தையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரம் டேலியனில் பிரபலமான சந்தை ஒன்று சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது .சந்தைக்கு கீழே நிலத்துக்கு அடியில் இருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது.வேகமாக பற்றி எரிந்த தீ கண்இமைக்கும் நேரத்தில் சந்தை முழுவதிலும் பரவியது.
இதற்கிடையில் இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இருப்பினும் இந்த விபத்தில் தீயின் கோரப்பிடியில் சிக்கி தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் 5 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.








































