Loading...
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொது இடத்தில் போதையில் நடமாடிய ஒருவரை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று(5) உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை, சுமேதகம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Loading...
சந்தேக நபர் திருகோணமலை நகரில் பொது மக்கள் நடமாடுகின்ற இடத்தில் மது போதையில் நின்று கொண்டு தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்ட நபர் ஒருவரை பொது மக்கள் வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபரை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிறுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Loading...








































