Loading...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
கல்முனையை சேர்ந்த 42 வயதான சந்தேக நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சுகயீனம் காரணமாக கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் மேலதிக சிகிச்சைக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...








































