அமைச்சரவை மறுசீரமைப்பு ஜனவரி 12ஆம் திகதி இடம்பெறும் என அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி அமைச்சர்கள் சிலருக்கு பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் மேலும் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்பிரகாரம், அரசாங்கத்தின் பிரதம கொறடாவான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடமுள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சு, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு மாற்றப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக ஜயந்த கெட்டகொடவும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கீழ் மேலும் பல அமைச்சுக்கள் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் நிமல் லான்சாவை அமைச்சரவை அமைச்சராக நியமிக்க முன்மொழியப்பட்ட போதிலும், இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
இவை அனைத்தும் அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பான தற்போதைய நிலைமை தான் என்றும் இவற்றில் கடைசி நேரத்தில் எந்தவொரு மாற்றமும் ஏற்படலாம் என்றும் அரச உயர்மட்டத் தகவல்கள் தெரவித்துள்ளன.








































