இன்றைய அரசாங்கத்தில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்பது தனக்குத் தெரியாது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நேற்றைய தினம் அதிரடியாக இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டார்.
இதன் பின்னர் தனது அமைச்சின் அலுவலகத்திலிரந்தும் வெளியேறிய அவர், இந்த பதவி நீக்கமானது தனக்கு கிடைத்த ஆசீர்வாதம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இது குறித்து அந்த செவ்வியின் போது, துப்புரவுத் தொழிலாளர்களுக்கு நிகராகக் கூட படிக்காத ஒருவரால் இன்று நாடாளுமன்றம் ஆளப்படுகிறது
அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதை நான் பாக்கியமாக கருதுகிறேன்.
இதேவேளை, அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் தோல்வியடைந்ததாகக் கூறி அவர்களைக் கடந்து செல்வார்களா என்றும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.








































