Loading...
தல்பொத பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் தனது மருமகளின் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 தங்க நெக்லஸ்கள், 2 மோதிரங்கள், 1 பதக்கத்தை பாதுகாப்பாக வைக்கும்படி மாமியாரிடம் நகைகளை கொடுத்துள்ளார் மருமகள். எனினும், அலமாரியில் பத்திரமாக இருந்த தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன.
Loading...
இது குறித்து விசாரணை நடத்திய பொலிசார், கதுருவெல பகுதியிலுள்ள நகைக்கடை ஒன்றில் இந்த நகைகள் கண்டெடுத்தனர். மாமியாரை கைது செய்த பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதில் அவர் நகைகளை திருடியது உறுதி செய்யப்பட்டது.
Loading...








































