ஹட்டன், கினிகத்ஹேன மத்திய கல்லூரியின் 08 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டு பாடசாலை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளதாகவும் கினிகத்ஹேன தேசிய பாடசாலையின் அதிபர் உபுல் இந்திரஜித் தெரிவித்தார்.
மாணவர்கள், ஆசிரியர்கள் தொற்றுக்குள்ளாகியதையடுத்து சுமார் 150 மாணவர்கள், 63 ஆசிரியர்கள் இன்று (18) பாடசாலைக்கு வருகை தந்துள்ளனர். அறிகுறிகளுடன் கூடிய மாணவர்களின் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
பாடசாலைக்கு வராத மாணவர்களிற்கு சூம் தொழில்நுட்பத்தின் மூலம் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருக்கமாக இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிபர் கூறினார். தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்த சுமார் 500 மாணவர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அதிபர் கூறினார்.








































