Loading...
வல்லாரை கீரை பொரியல் செய்வது எப்படி என்று இன்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வல்லாரை கீரை 1 கப்
- வெங்காயம் 1
- பச்சை மிளகாய் 3
- பூண்டு 5 பல்
- பெருங்காயம் 1/2 டீ ஸ்பூன்
- தேங்காய் துருவல் 1/2 கப்
- உப்பு சிறிதளவு
- எண்ணை 1 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணை ஊற்றி கடுகு சீரகம் போட்டு தாளித்து பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பெருங்காயம் போட்டு பொடியாய் நறுக்கிய கீரை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
Loading...
பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வேக வைத்து எடுக்க வேண்டும். கீரை வெந்ததும் அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
கீரை ஆறின பின் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இப்போது வல்லாரை கீரை பொரியல் ரெடி….
Loading...








































