Loading...
நடிகர்கள் ஜெயராம், எஸ்.வி.சேகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ், மலையாளத்தில் பிரபலமான நடிகரான ஜெயராம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கு கடந்த 2 நாட்களாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக மருத்துவ பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன் என குறப்பிட்டுள்ளார்.
Loading...
திரைப்பட நகைச்சுவை நடிகராகவும், இயக்குனராகவும் பணியாற்றி வருபவர் எஸ்.வி.சேகர். அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டதால் டாக்டரின் அறிவுறுத்தல் படி அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
Loading...








































