Loading...
ஹோமாகம ஆதார வைத்தியசாலை பணிக்குழாமைச் சேர்ந்த 23 ஊழியர்கள் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜனித் ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
அதன்படி, மூன்று வைத்தியர்கள், பதினொரு தாதியர்கள் மற்றும் கனிஸ்ட பணிக்குழாமைச் சேர்ந்த ஒன்பது பேரும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Loading...
இதேவேளை, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, குறித்த வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் இரண்டு சிகிச்சை அறைகளில் 75 படுக்கைகளே உள்ளன, எனினும், தற்போது 81 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...








































