இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான லாஸ்லியா மரியநேசன் தற்போது தமிழக மக்கள் மத்தியில் ஒரு நடிகையாக வலம் வரத்தொடங்கியுள்ளார்.
இவர் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பன BIG BOSS நிகழ்ச்சியிக்ல் பங்கு பெற்றதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானதுடன் சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
அத்துடன் தற்போது விளம்பரங்கள் மற்றும் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சினிமாவில் என்ரியான அர்ஜுன். சதீஷ், ஹர்பஜன் நடிப்பில் வெளியான ஃப்ரண்ட்ஷிப் படத்தில் லாஸ்லியா நடித்திருந்தார்.
தற்போது கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் லாஸ்லியாவின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.











































