சின்னத்திரையில் உள்ள பிரபல நாடகத்தில் நடித்து வந்த வாணி போஜன் தற்போது திரையில் அறிமுகமாகி நடித்து வருகின்றார். நடிகர் வைபவ் நடிக்கும் சிக்ஸர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அடுத்ததாக ஹாட்ஸ்டார் தளத்திற்காக ஜெய் மற்றும் வாணிபோஜன் இருவரும் இணைந்து ட்ரிபிள்ஸ் என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து இருந்தார். இது வாணி போஜனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இவரது நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படமும் நல்ல வெற்றியடைந்தது. சின்னத்திரை நடிகை என்று அடையாளபடுத்த முடியாத அளவிற்கு அவர் பின்னி பெடலெடுத்தார். மிகவும் கெத்தாக அதில் வாணி போஜன் நடித்திருப்பார்.
A post shared by Vani Bhojan (@vanibhojan_)
சமீபத்தில் வாணி போஜன் புதிய படமான கோசிகா படத்தின் டப்பிங் பணிகளை முடித்து விட்டர். இந்த நிலையில், தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை அணிந்து வெளியிட்டுள்ள அழகான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.








































