எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கைக்கு அனுமதி வழங்குவது குறித்த தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மின்வெட்டுகளை அமுல்படுத்துவதற்கு மின்சாரசபை முயன்றதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கட்கிழமை வரை மின்வெட்டை அமுல்படுத்துவதை தவிர்க்குமாறு மின்சார சபைக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் நிலைமைகளட குறித்து விவாதிக்க மின்சாரசபையின் பொது மேலாளர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக அவர் கூறினார்.
கடந்த இரண்டு மூன்று வாரங்களில் மின்சார சபையானது எந்தவித இடையூறும் இன்றி மின்சாரத்தை வழங்குவதற்கு தன்னால் இயன்றதைச் செய்ததாகக் கூறிய அவர், நுகர்வோர் மற்றும் அரச அலுவலகங்கள் மின்சாரசபைக்கு ஆதரவளிக்கத் தவறியதால் அவர்களால் அதனைத் தொடர்ந்து செய்ய முடியவில்லை என்றும் கூறினார்.








































