Loading...
தலவாக்கலை – லிந்துலை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட லிந்துலை நகரில் இடம்பெற்ற தீ விபத்தில், லெமலியர் தோட்டத்தை சேர்ந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
லிந்துலை நகரில் உள்ள உணவகம் ஒன்றில் சமையலறையில் பணியாற்றிக் கொண்டிருந்தவேளை, திடீரென குறித்த நபரின் உடையில் தீ பரவியுள்ளது.
Loading...
குறித்த சடலமானது தற்போது சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் லிந்துலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
Loading...








































