தற்போது பொதுமக்கள் எதிர்நோக்கும் சுமைகளுக்கு மத்தியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான நேரம் பொருத்தமானதல்ல என ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜே.வி.பியின் அரசியல் பீட உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த, தொடர்ந்தும் சேவையாற்றும் நிலையில் தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபடுவதே பொருத்தமானதாகும் என்றார். வேலைநிறுத்த நடவடிக்கையின் விளைவாக அரசாங்கத்திற்கு சாதகமான சூழ்நிலை உருவாகும் என்று லால்காந்த கூறினார்.
கடுமையான சுமைகளுக்கு உள்ளாகி, அரசாங்கத்தை குற்றம் சாட்டும் மக்கள் மருத்துவமனைகளில் சேவைகளைப் பெற முடியாவிட்டால், அதற்குப் பதிலாக வேலைநிறுத்த நடவடிக்கையைக் குறை கூறத் தொடங்குவார்கள் என்று அவர் கூறினார்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார நிபுணர்களை மக்கள் குற்றம் சுமத்துவார்கள் என்றும் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் தவறியதாக கூறமாட்டார்கள் என்றும் லால்காந்த குறிப்பிட்டார்.
மக்கள் சுகாதார நிபுணர்களை குறை கூறும்போது, ஆட்சியாளர்கள் மக்களுக்காக இருப்பார்கள், அவர்களின் மீட்பர்களாக மாறுவார்கள் என்றும் அவர் கூறினார்.








































