இளவாலை பொலிஸ் பிரிவில் வீடொன்றில் இருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை திருட்டில் ஈடுபட்டிருந்த மூன்று சந்தேகநபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த திருட்டு நகைகளை அடகு மற்றும் விற்பனை செய்து பணம் வழங்கி உதவிய குற்றச்சாட்டில் தந்தையும், மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்சேன்துறை வறுத்தவிளான் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் 53 வயதுடைய தந்தையும், 36 வயதுடைய மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளவாலை பொலிஸ் பிரிவில் அண்மைக்காலமாக பட்டப்பகலில் வீட்டில் உள்ளவர்கள் வெளியில் செல்லும் வேளையில் வீடு உடைத்து திருடும் 7இற்கு மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
அவை தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இது குறித்து காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையிலேயே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்த 3 பவுண் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.








































